×

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

திருப்பாடல்கள் ௨௫

1
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2
“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
3
அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
5
அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
6
பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”
Tamil Bible TCV 2022
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம் பதிப்புரிமை 2005, 2022 Biblica, Inc. இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை. Holy Bible, Indian Tamil Contemporary Version™ 2005, 2022 by Biblica, Inc
:
குறிப்புகளைச் சேமிக்கவும்