நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதாவது; முதன்மையாக எல்லா மக்களுக்காகவும் வேண்டுதல் செய்யுங்கள், மன்றாடுங்கள், பரிந்து பேசுங்கள், நன்றி செலுத்துங்கள்.
அரசர்களுக்காகவும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறைபக்தியும் பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியுமான வாழ்க்கை வாழ முடியும்.
இதற்காகவே நான் போதிக்கின்றவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக் கொடுக்கின்றவனாகவும் நியமிக்கப்பட்டேன். நான் சொல்வது உண்மை, பொய் சொல்லவில்லை.
அதேபோல பெண்கள் அடக்கமானதும், ஒழுக்கம் மற்றும் தகுதியானதுமான ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்புகிறேன். விதவிதமான சிகை அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலையுயர்ந்த ஆடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல்,