இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
|
| 1 |
| இப்படியிருக்க அனைத்துத் தீமைகளையும், ஏமாற்றும் சுபாவத்தையும், வெளிவேடத்தையும், பொறாமையையும், எல்லாவிதமான அவதூறுப் பேச்சுக்களையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். |
| 2 |
| புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்போது அதன்மூலமாக உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள். |
| 3 |
| ஏனெனில் கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறீர்கள். |
| 4 |
| இயேசுவே மனிதரால் நிராகரிக்கப்பட்ட, ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற வாழ்கின்ற கட்டடக் கல். அவரிடமே நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். |
| 5 |
| இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும் பரிசுத்த குருத்துவப் பிரிவாக உயிருள்ள கட்டடக் கற்களைப் போல ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள். |
| 6 |
| ஏனெனில்: “பாருங்கள்! சீயோனிலே ஒரு கட்டடக் கல்லை வைக்கிறேன். அதுவே அனைத்தையும் இணைக்கின்ற, தேர்ந்தெடுக்கப்பட்டதும் விலைமதிப்பற்றதுமான பிரதான மூலைக் கல். அவரில் நம்பிக்கையாய் இருக்கின்றவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. |
| 7 |
| விசுவாசிக்கின்ற உங்களுக்கு அது பெருமதிப்பிற்கு உரியது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ, “கட்டடம் கட்டுகின்றவர்களால் நிராகரிக்கப்பட்ட கட்டடக் கல்லே மூலைக் கல் ஆயிற்று.” |
| 8 |
| இது, “மனிதர்களை இடறச் செய்து, அவர்களை விழச் செய்கின்ற கற்பாறையாகவும் இருக்கின்றது.” அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததனாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். |
| 9 |
| ஆனால் நீங்களோ, உங்களை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் சிறப்பை அறிவிக்கும்படி தெரிவு செய்யப்பட்ட மக்களாகவும், இறை அரச குருத்துவப் பிரிவாகவும், பரிசுத்த இனமாகவும், இறைவனின் உரிமைச் சொத்தான சமூகமாகவும் இருக்கின்றீர்கள். |
| 10 |
| முன்பு நீங்கள் மக்களாக இருக்கவில்லை, ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்கள். முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெறாதிருந்தீர்கள், ஆனால் இப்பொழுதோ இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள். |
| 11 |
| பிரியமான நண்பர்களே! இந்த உலகத்தில் அந்நியரும், பிறநாட்டவருமாய் இருக்கின்ற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்களுக்கெதிராகப் போரிடுகின்றன. |
| 12 |
| வெளிப்படையான நன்னடத்தை உள்ளவர்களாக வாழுங்கள். அப்போது இறைவனை அறியாதவர்கள் உங்களை தீமை செய்கின்றவர்கள் என்று குற்றம் சாட்டினாலும், அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில் இறைவனை மகிமைப்படுத்துவார்கள். |
| 13 |
| மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற எல்லா அதிகாரங்களுக்கும் கர்த்தரின் பொருட்டு பணிந்து நடவுங்கள். மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, |
| 14 |
| அல்லது தீமை செய்கின்றவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கின்றவர்களைப் பாராட்டவும், அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். |
| 15 |
| ஏனெனில் நன்மை செய்வதன் மூலமாக நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்க வேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கின்றது. |
| 16 |
| சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள், ஆனால் அந்த சுதந்திரத்தை உங்கள் தீய வாழ்க்கைக்கு ஒரு மூடுதிரையாக பயன்படுத்தாதீர்கள். மாறாக இறைவனுக்கு பணி புரியும் அடிமைகளாக வாழுங்கள். |
| 17 |
| அனைவருக்கும் உரிய மதிப்பு கொடுங்கள், விசுவாச குடும்பத்தாருடன் அன்பாய் இருங்கள், இறைவனுக்குப் பயந்திருங்கள், அரசனை மதித்து வாழுங்கள். |
| 18 |
| அடிமைகளே! உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள். |
| 19 |
| ஏனெனில் இறைவனை மனதில்கொண்டு, ஒருவர் தனக்கு அநீதியாக இழைக்கப்படும் வேதனையை சகிப்பாரானால் அது பாராட்டுக்குரியது. |
| 20 |
| ஆனால் நீங்கள் செய்த தவறுக்காக தண்டிக்கப்படுகின்றபோது அதைச் சகித்துக்கொண்டால் உங்களை பாராட்ட முடியுமா? மாறாக, நன்மை செய்து அதன் காரணமாக வேதனை அனுபவிக்கின்றபோது நீங்கள் அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியது. |
| 21 |
| இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்க வேண்டும் என்பதற்காக, கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகளை அனுபவித்து உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். |
| 22 |
| “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.” |
| 23 |
| அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும் அவர் பழிவாங்கவில்லை. அவர் வேதனைகளை அனுபவித்தபோது அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கின்ற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார். |
| 24 |
| நாம் பாவங்களுக்கு மரணித்தவர்களாக இனிமேல் நீதியின் வழியில் வாழ்வதற்காக அவர் தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின் மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள்.” |
| 25 |
| ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப் போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” ஆனால் இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், பாதுகாவலருமாய் இருக்கின்ற கிறிஸ்துவிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள். |
|
| குறிப்புகளைச் சேமிக்கவும் |
https://beblia.bible:81/BibleAudio/tamiltrv/1peter/002.mp3
5
2